தமிழகம்

தமிழகத்தில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தி இமாலய சாதனை!

45views

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரியில் இருந்து இன்றுவரை தமிழகத்தில் 4 கோடி பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு இமாலய சாதனை படைத்துள்ளது.

மேலும் இன்று தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி 28 லட்சம் பேருக்கு இன்று ஒரே நாளில் தமிழ்நாடு அரசு சார்பாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 185370 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பாக அரசு மருத்துவமனைகள் மூலம் 3,79,65,592 பேருக்கும், தனியார் மருத்துவமனைகள் மூலம் 2280173 பேருக்கும் COVID தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த சாதனை குறித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “Covid 19-ஐ தடுத்து வெல்லும் ஆயுதமாம் தடுப்பூசி போடுவதை மாபெரும் பேரியக்கமாக நடத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை! இதுவரை 4 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இமாலய சாதனை! மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி! தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் செலுத்திக் கொள்ளுங்கள்! நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்!” என்று கூறியிருந்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!