நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஊட்டி நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பின்னர் வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
கோடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவர வேண்டும். புலன் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது என்று கூறினார்.