செய்திகள்தமிழகம்

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக் குறைவால் காலமானார்..!!

55views

மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 9-ம் தேதி மதுரை கே.கே. நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

எனினும், நேற்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்தநிலையில் சுவாசக்கோளாறு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மதுரை ஆதினத்தின் உயிர் பிரிந்தது.

மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக அருணகிரிநாதர் இருந்து வந்தார். தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த ஆதீனம் சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.

தான் சரி என்று நினைக்ககூடிய அரசியல், சமூக கருத்துகளையும் முன்வைத்தார் மதுரை ஆதினம். சைவமும், தமிழும் இரு கண்கள் என்று வாழ்ந்த பெருமைக்குரியவர் மதுரை ஆதீனம். தமிழ்த்தொண்டு, ஆன்மீக தொண்டு மற்றும் சமூக பணிகளில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!