செய்திகள்தமிழகம்

ஆகஸ்ட் 20ம் தேதி மொஹரம் பண்டிகை – தலைமை காஜி அறிவிப்பு!!

100views

தமிழகத்தில் முஸ்லிம்களின் பண்டிகையான மொஹரம் வரும் ஆகஸ்ட் (20.08.2021) அன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்து உள்ளது.

மொஹரம் முஸ்லிம்களின் சிறப்பு வாய்ந்த பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முஸ்லிம்களின் மாதமான மொஹரம் மாதத்தின் 10 நாள் பண்டிகை அனுசரிக்கப்படுகிறது. தொடர்ந்து 10 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு வைத்து வழிபடுவர். இந்த பண்டிகை தியாகத் திருநாளாக கடைபிடிக்கப்படுகிறது. முகமதுவின் பேரனான இமாம் ஹுசைன் இஸ்லாமிய கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக தன் உயிரை ஈர்த்த திருநாள் என்று போற்றப்படுகிறது.

இவரின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் மொஹரம் மாதத்தின் 10ம் நாள் நோன்பு திறந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்த நாளில் புத்தாடை அணிந்தும், உணவுகள் சமைத்தும் அதை உறவினர்களுடன் பகிர்ந்து உண்ணுவர். மேலும் இந்த நன்னாளில் சமைத்த உணவை ஏழை, எளிய மக்களுக்கும் வழங்குவர். இதனால் இந்த மொஹரம் பண்டிகை ஈகை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை நோன்பு 09.08.2021 அன்று அனுசரிக்கப்பட இருந்த நிலையில் மொஹரம் மாத பிறை சில இடங்களில் தென்படவில்லை. அதனால் 11.08.2021 அன்று புதன்கிழமை மாதத்தின் முதல் நோன்பு கடைபிடிக்கப்பட உள்ளது. அதன்படி யொமே ஷஹாதத் (20.08.2021) வெள்ளிக்கிழமை அன்று மொஹரம் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி அறிவித்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!