கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் வரும் 31ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , ” கொரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக , அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா , வண்டலூர் 17.01.2022 முதல் 31.01.2022 வரை பொதுமக்களுக்கு மூடப்படுகிறது .
31.01.2022 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து , அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஏனென்றால் அங்கு வேலை செய்யும் 70 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
அதனால் அவர்களின் மூலம் விலங்களுக்கு கொரோனா பரவல் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தகைய முடிவை பூங்கா நிர்வாகம் எடுத்துள்ளது.
கடந்த ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல் இப்போது நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜனவரி 31 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.