செய்திகள்தமிழகம்

3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயார்; மா.சுப்பிரமணியன்

85views

கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை அண்ணாநகரில், நடைபெற்ற, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட, முன்களப் பணியாளர்கள் மற்றும் நலச்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தொற்று அதிகரிக்கிறது என கூற முடியாது என்றார். 3-வது அலை வந்தாலும், எதிர்கொள்ளும் வகையில் கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேவையான ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாக கூறினார்.

முக கவசம் அணிவத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், பொதுமக்கள் பொறுப்பை உணர்ந்து முறையாக விதிகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மாநில எல்லைகளில் வருவாய்துறை, மக்கள் நல்வாழ்வு துறை, காவல்துறை இணைந்து பரிசோதனை மேற்கொண்ட பின்னரே பயணிகளை அனுமதிப்பதாக அவர், குறிப்பிட்டார். தேவையின்றி அண்டை மாநிலங்களுக்கு பயணிக்க வேண்டாம் எனவும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!