தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழகத்திலுள்ள வைணவ திருத்தலங்களில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக வைகுண்ட ஏகாதசி விழா, கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது.வைகுண்ட ஏகாதசியையொட்டி தமிழகத்திலுள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் சொர்க்கவாசல் வழியாக ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் உடன் பெருமாள் அருள்பாலித்தார்.
இந்த ஆண்டு விழா நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்த ஆண்டும் பக்தர்களுக்கு சொர்க்க வாசல் திறப்பின் போது தடை விதிக்கப்பட்டது. திருப்பதியில்…வைகுண்ட ஏகாதாசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கோவிட் கட்டுப்பாடு காரணமாக, முக்கிய பிரமுகர்கள் மட்டும் விழாவில் கலந்து கொண்டனர்.