குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்ப சலனம் காரணமாக காரணமாக இன்று நீலகிரி ,கோயம்புத்தூர் ,தேனி, கன்னியாகுமரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ,விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,காஞ்சிபுரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தது.இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், போரூர், அசோக் நகர், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது.
இந்நிலையில் வங்க கடலில் வரும் 11 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு, வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரப் பகுதிகளில் உருவாகும் தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.