தமிழகம்

ரூ.1,281 கோடி! நீர் வழி போக்குவரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டம்

54views

சென்னையில், நீர் வழி போக்குவரத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, கிளை கால்வாய்களை சீரமைக்கவும், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையுடன், சென்னை மாநகராட்சி, பொதுப்பணித்துறை இணைந்து, 1,281 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.சென்னையில், முக்கிய நீர் வழித்தடங்களாக, கூவம், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் ஆகியவை உள்ளன. குப்பை, கழிவு நீர் கலப்பால், இவை சாக்கடை போல் காட்சியளிக்கின்றன. நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகள், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.இதில், கூவம் ஆற்றின் கரையோரத்தில் இருந்த, 12 ஆயிரத்து 400 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளன.

தற்போது, 1,800 குடியிருப்புகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.அதன்படி, கூவம் கரையோரத்தில் இருந்த, 80 சதவீத குடியிருப்புகள் அகற்றப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், அடையாறு, பகிங்ஹாம் கால்வாய் சீரமைக்கும் பணிகளும் நடைபெறுகின்றன.இந்நிலையில், கூவம், அடையாறு, பகிங்ஹாம் உள்ளிட்ட பிரதான நிர்நிலைகளை ஒட்டியுள்ள, 52 கிளை கால்வாய்கள் சீரமைக்கப்பட உள்ளன. இதற்காக, 1,281 கோடியே 88 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.இப்பணிகளை, சென் னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில், சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மேற்கொள்ள உள்ளது.இது குறித்து, சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னையில் உள்ள முக்கிய நீர்வழித்தடங்களில், நீர்வழி போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இதன் வாயிலாக கிடைக்கும் வருவாயை பயன்படுத்தியே, நீர்வழித்தடங்களின் பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள முடியும்.அதன்படி, எண்ணுாரில் இருந்து, மரக்காணம் வரையிலான, பகிங்ஹாம் கால்வாயில், படகு போக்குவரத்து கொண்டு வர, அரசு திட்டமிட்டுள்ளது.சென்னையில் உள்ள, பல்வேறு கிளை கால்வாய்களும் அடையாளம் காணப்பட்டு, எவை எல்லாம், படகு போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியும் என்ற வகையிலும், ஆராயப்பட்டு வருகிறது.கிளை கால்வாய்களை சீரமைக்கும்போது, மழை காலங்களில் வெள்ள பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக, 2015ல் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தின் போது, கிளை கால்வாய்கள் பராமரிக்கப்படாமலும், புதர்மண்டி கிடந்ததும், அதிக பாதிப்புக்கு காரணமாக கண்டறியப்பட்டது.

கிளை கால்வாய்களை சீரமைப்பதற்காக, தமிழக அரசு, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, பூர்வாங்க பணிகள் நடந்து வருவதால், விரைவில் பணிகள் துவங்கப்படும். இப்பகுதிகளில் உள்ள, 21 ஆயிரத்து 334 ஆக்கிரமிப்புகள் அகற்றி, மறு குடியமர்வு செய்ய 3,339 கோடி ரூபாய் செலவாகும். அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.கிளை கால்வாய் எண்ணிக்கைநீர்நிலை – கிளை கால்வாய்பகிங்ஹாம் – 21அடையாறு – 23கூவம் – 8மொத்தம் – 52

Right Click & View Source is disabled.

error: Content is protected !!