நாளை முதல் முழு முடக்கம் அமலுக்கு வருவதால் சென்னையில் இருந்து மக்கள் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர்.
கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு முடக்கங்ளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
தற்போது அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி.
மின் வணிக நிறுவனங்கள் மூலம் பலசரக்கு, காய்கறிகள், இறைச்சி, மீன் ஆகியவை மதியம் 12 மணி வரை விநியோகிக்க அனுமதி. மளிகை, பல சரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை.
இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல தொடங்கியுள்ளனர். ஊருக்கு செல்ல வசதியாக 24 மணி நேரமும் பேருந்துகள் இயக்கப்படும் என நேற்று தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் சென்னையை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் பயணிக்கின்றனர்.
ஊரடங்கு கால நீட்டிப்பு செய்யப்படும் என்கின்ற நோக்கத்தில் சென்னையை காலி செய்து கொண்டு அனைவரும் தென் மாவட்டங்களுக்கு படை எடுத்துச் செல்கின்றனர்.