தமிழகம்

மாணவர்களுடன் இனைந்து பசுமை விழிப்புணர்வில் ஈடுபட்ட “திருவொற்றியூர்” காவலர்கள்

57views
சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான வெள்ளையன் செட்டியார் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் திரு.சுதாகர் தலைமையில் நடைபெற்றது .

இதில் மாணவ மாணவியருக்கு காவல் ஆய்வாளர் திரு.சுதாகர் கொரோனா பற்றிய விழிப்புணர்வும் அதன் வழிகாட்டு நெறிமுறைகள் பற்றியும் எடுத்துரைத்தார் ,இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் .

சென்னையின் புதிய காவல்துறை ஆனையனரான சங்கர் ஜிவால் செப்டம்பர் 1 முதல் பள்ளி திறக்கபட்டதை அடுத்து மாணவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வழியிருத்தியுள்ளார் .இதனை அடுத்து ஆனையர் மற்றும் துனை ஆனையரின் வழிகாட்டுதலின் பேரில் பல பள்ளிகளுக்கு காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் சென்று நேரடி விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதன் ஒரு பகுதியாக திருவொற்றியூர் காவல்துறையினராலும் திருவொற்றியூரில் உள்ள முக்கிய பள்ளியில் நேற்று கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளபட்டுள்ளது .

இது வெறும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் .நேற்று உலக ஓசோன் தினம் என்பதால் சுற்றுசூழல் பற்றிய விழிப்புணர்வு பேரனியையும் மாணவர்கள் நடத்தியுள்ளனர் அதில் காவலர்களும் கலந்து கொண்டுள்ளனர் .
முதலில் கொரோனா விழிப்புணர்வு பற்றி மாணவர்களுடன் பேசிய காவல்துறையினர் பின்னர் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களுடன் இனைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர் .
இதன் பிறகு நிகழ்ச்சியின் இறுதி பகுதியாக மாணவர்கள் காவல்துறை தலைமையில் பள்ளியில் இருந்து ஓசோன் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளுடன் புறப்பட்டு தெருக்களுக்கு சென்று அங்கு மக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர் .
இந்த மாணவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஓசோன் பாதிப்பு பற்றியும், சுற்றுச்சூழல் மாசு அடைந்துள்ளதை பற்றியும் ,மக்கள் செய்ய வேண்டிய நெறிமுறைகள் பற்றியும் தெளிவாக விளக்க பதாகைகளாக மாணவர்களால் எடுத்து செல்லபட்டது .
  • கே.எஸ்.விஷ்ணுகுமார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!