“தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்” என, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதிப்பது ஒருதலைப்பட்சமானது. மத விழாக்களை வீடுகளில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதால், இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிப்பதாகக் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவதை கண்டிக்கிறோம்.நாடு முழுவதும் எல்லா மத விழாக்களையும் தொற்று பரவாமல் கொண்டாட வேண்டும் என்பதுதான் அந்த சுற்றறிக்கை.மத்திய அரசு சொன்னபடி நீட், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினார்களா.
கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்து உள்ளனர். அது போல் இங்கும் அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக், பூங்காக்கள் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கொரோனா பரவும் என்பது எந்த வகை நியாயம்.விநாயகர் சிலை அமைப்பாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி, இந்த விழாக்களை சுமூகமாக நடத்த வேண்டும்.மாறாக இவ்விழாவுக்கு தடை விதித்தால் அதனை மீறி விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவோம். தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்ற ஈ.வெ.ரா.,வுக்கு சிலை வைப்பதை எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.