கவிதை

மஞ்சுளா யுகேஷ் – கவிதை

158views

கனவு கண்டேன்
கனிவான இதயங்கள்
கவலையற்ற மனிதர்கள்
களிப்பான முகங்கள் காண
கனவு கண்டேன்

கண்டங்கள் தாண்டியும்
அண்டங்கள் தேடியும்
கண்ட கனவு போல்
கிடைக்காதா என ஏங்கியே
கனவு கண்டேன்

எங்கும் கிடைக்கவில்லை
எளிதில் சிக்கவில்லை
என்ன இது சோதனை
என இறைவனை கேட்பது போல்
கனவு கண்டேன்

கடகடவென சிரித்து
கடவுள் சொன்னார்
புறக்கண்ணால் பார்க்காதே
புலப்படாது என்றார்
அகக்கண்ணால் பார்
அனைவரும் நல்லவரே
ஆனந்தம் மிக்கவரே எனக்கூறி
ஆண்டவன் மறைந்தார் போல்
கனவு கண்டேன்

கனவு கலைந்தாலும்
கண் திறக்காமல் பார்த்தேன்
புறக்கண் மூடியதால்
அகக்கண்ணால் பார்த்தேன்
ஆண்டவன் சொன்னது
அற்புதம் என அறிந்தேன்

 

  • மஞ்சுளா யுகேஷ், துபாய்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!