பெட்ரோல், டீசல் இன்றும் அதிரடி உயர்வு – தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரூ.100ஐ தாண்டி விற்பனை
கொரோனா லாக் டவுன் காலத்திலும் பெட்ரோல், டீசல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனையாகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.19 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 93.23 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மே மாதத்தின் தொடக்கத்தில் இருந்து தினசரியும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா லாக்டவுன் காலத்திலும் தினசரியும் விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்துள்ளது. டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.19 ரூபாய் ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 93.23 ரூபாய் ஆக விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னையில் சதமடிக்கப்போகும் பெட்ரோல் விலை – இன்று எவ்வளவு தெரியுமா
சென்னையைத் தவிர பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தொட்டுள்ளது. ஸ்பீடு பெட்ரோல் 104 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், ராமநாதபுரம், திண்டுக்கல், மயிலாடுதுறை, சேலம் ஆகிய 14 மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டிவிட்டது.
பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்த விலை ஏற்றத்தால் பொது மக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.