செய்திகள்தமிழகம்

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்தா? இன்று முக்கிய ஆலோசனை!

58views

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வை தவிர மற்ற தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் அடங்கும். இந்த சூழலில் 12 ஆம் வகுப்பு தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். அதேசமயம் 12 ஆம் வகுப்பு தேர்வை நடத்த பெற்றோர்கள் வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாநில கல்வித்திட்ட பிளஸ் 2 தேர்வு பற்றி ஆலோசனை நடக்கிறது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு குறித்த அறிவிப்புக்குப் பிறகே, தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே தெரிவித்த நிலையில் நேற்று சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!