“இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் துவக்கி வைத்தார்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டம் இன்று செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் துவக்கி வைத்தார்.