டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணியும், நியூசிலாந்து அணியும் நேற்று ஷார்ஜா மைதானத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்திருந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக மிட்செல் மற்றும் டேவன் கான்வே 27 ரன்கள் எடுத்திருந்தனர். மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன்களை எடுக்கவில்லை.
இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆசிப் அலி 27 ரன்னும், ஷோயப் மாலிக் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை விளையாடினர். இறுதியில் பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை, நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் சிறிது நேரம் கட்டுப்படுத்தினர். ஆனால் இறுதியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடிய வெற்றி பெற்றுள்ளனர்.