கவிதை

நினைவின் நெருடல்

127views

உன்னை அழைக்க
இயலாத எண்னை

அலைபேசியில் சேமித்து
தொடுதிரையில் பார்த்து

ஆழ்ந்த நெடுமூச்சில்
அனைத்தும் சுட்டெரிக்க

தொலைதூர பாடலில்
தொலையாத நினைவலைகள்

எங்கோ எப்போதோ
சேர்ந்தமர்ந்த இடங்களும்

தொண்டையில் மீன்முள்ளாய்
நினைவின் நெருடல்கள்

விஜி கிருஷ்ணன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!