91views
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி வரையில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என மீனவர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.