நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரைத்துறை பிரபலங்களின் பிரமாண்டமாக திருமணங்கள் ஓடிடி-யில் வெளியாவது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. அதற்காக பெரும் தொகை பெற்றனர்.
அதேபோல் தமிழில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இந்த வழியை கையில் எடுத்தனர். கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைத்திறை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.இந்த பிரம்மாண்ட திருமணத்தை வீடியோவாக எடுத்து நெட்பிளிக்ஸில் தளத்தில் வெளியிடுவது திட்டம். அதற்காக 25 கோடி கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது.
எனவே திருமணத்தில் இருந்து ஒரு புகைப்படம் கூட வெளியாகாத வண்ணம் உச்ச கட்ட பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. இதற்கிடையில் விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை முன்னரே வெளியிட்டதால் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து பின் வாங்கியதாகக் கூறப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ விரைவில் வெளியாக இருப்பதாக நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளனர். மேலும் விக்கி நயன் இருவரும் கடற்கரையில் நடத்தியுள்ள அசத்தல் போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் முதல் சீசனாக விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது. அதில் திருமணம் சார்ந்து நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெறுகின்றன. அதையடுத்து நயன்தாராவின் வாழ்க்கை பயணம் குறித்த சீசன் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.