தமிழகம்

திடீர் கலவரம் : 3 மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு!

49views

கடலில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. சுருக்குமடி வலையால் மீன்வளம் பாதிக்கப்படுவதாக சொல்லப்படும் நிலையில், புதுச்சேரி கடல் பகுதியில் ஒருசில மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துள்ளனர். இதற்கு ஒருசில மீனவ பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் நல்லவாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் வீராம்பட்டினம் அருகே படகில் சென்று சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதனால் சுருக்குமடி பயன்படுத்த தடை உள்ள நிலையில் ஏன் மீன் பிடிக்கிறார்கள் என்று வீராம்பட்டினம் மீனவர்கள் கேள்வி கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அங்கு கலவரம் வெடித்தது. நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தங்களுடைய பெரிய படகின் மூலம் வீராம்பட்டினம் மீனவர்களின் படகை இடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இரும்பு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கடற்கரையில் கூடிய நிலையில் நல்லவாடு மீனவ கிராமத்திற்கு சென்று அப்பகுதி மீனவர்கள் தாக்க முற்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை அமைதிப்படுத்தியதோடு கலவரம் ஏற்படாமல் இருக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து இருதரப்பு மீனவர்களும் கலைந்து சென்றனர்.இந்நிலையில் புதுச்சேரியில் மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து வீராம்பட்டினம், நல்லவாடு, வம்பா கீரப்பாளையம் ஆகிய மீனவ கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!