111views
தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றுஅச்சுறுத்தி வருவதால், கரோனாதடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 20-வது மெகா கரோனா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசியும், இணை நோயுடன் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் தகுதியுள்ளோருக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்படும்.
தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.அதனால், தடுப்பூசி மையங்கள்நாளை செயல்படாது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.