தமிழகம்

தமிழகம் முழுவதும் அதிகரித்த காற்று மாசு! சென்னையில் மிக மோசம்!!

57views

தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று இரவு அதிக அளவில் பட்டாசுகள் வெடித்ததால் தமிழகம் முழுவதும், குறிப்பாக சென்னையில் காற்று மாசு மிகவும் மோசமடைந்துள்ளது.

காற்று மாசுகுறித்து உலக சூழலியல் அமைப்போடு தனியார் தன்னார்வ அமைப்பு இணைந்து நடத்திய அளவீடு மூலம் இது தெரியவந்துள்ளது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை இரவு நேரத்தில் பட்டாசு வெடிப்பதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது.

அப்போது மக்களால் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதனால் சென்னை நகரின் காற்று மாசு அளவு மோசம் என்கிற நிலைக்கு சென்றுள்ளது. சென்னை நகரில் காற்று மாசு அளவு 100 முதல் 150 என்கிற அளவில் உள்ளது.

அதிகபட்சமாக மணலியில் 344 குறியீடும், நுங்கம்பாக்கத்தில் 272 என்கிற குறியீடும் உள்ளது. பொத்தேரியில் 151, அம்பத்தூரில் 150 என்கிற அளவில் உள்ளது. வட சென்னையை விட தென் சென்னையில் காற்று மாசு குறைவாகவே உள்ளது.

தீபாவளி பண்டிகையான நேற்று மதியம் வரை சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவு 100க்கும் குறைவாக இருந்த நிலையில் இரவு பட்டாசு வெடித்த காரணத்தால் காற்று மாசு அதிகரித்துள்ளது.

மதுரையில் காற்று மாசு 188 குறியீடு என்கின்ற அளவிலும், கோவையில் 178 என்கிற அளவிலும் உள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 275 என்கிற அளவில் உள்ளது. திருப்பூரில் 233 என்கிற அளவில் உள்ளது.

தூத்துக்குடியில் 45 என்கிற அளவில் மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. மிக அதிகபட்சமாக திருச்சியில் 321, வேலூரில் 318 என்கிற அளவில் பதிவாகியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!