தமிழகம்

தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் கட்டாயம்

65views

மதுரையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது. மதுரையில் இதுவரை 14 ஆயிரத்து 896 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், மேலும் 2 ஆயிரத்து 33 ஆசிரியர்கள் தாமதமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

உடல் நல சூழலால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள இயலாத ஆசிரியர்கள், அதற்குரிய மருத்துவ சான்றிதழுடன் பள்ளிக்கு செல்ல வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!