காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93.
காங்கிரஸின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் தஞ்சை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தஞ்சை மக்களவை தொகுதி எம்பி-யாக இருந்தவர் இவர்.
சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரின் மகன் வழிப் பேரன் ராமநாதனுக்கும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது . இந்நிலையில் டிடிவி தினகரன் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் .