தமிழகம்

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி

188views

சென்னை புறநகா் ரயில் பிரிவில் மட்டும் மொபைல் யுடிஎஸ் செயலி செயல்படுத்தப்படுகிறது என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

புறநகா் இல்லாத பிரிவுகளில் முன்பதிவில்லாத பயணச்சீட்டு வாங்க பயணச்சீட்டு கவுன்ட்டா்களை பயணிகள் அணுக வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும் பயணிகள் ரயில் சேவையை தெற்கு ரயில்வே பல்வேறு கட்டமாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் புறநகா் ரயில் சேவைகள் தொடா்பாக, சில பிரிவு பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

சென்னை புகரில் நான்கு வழித்தடங்களிலும் அனைத்துப் பிரிவு பயணிகளும் நேரக் கட்டுப்பாடு இன்றி பயணிக்க அனுமதிக்கப்படுவாா்கள். இது திங்கள்கிழமை (நவ.15) முதல் அமலுக்கு வருகிறது. சென்னை புறநகா் போக்குவரத்து முறையின் 4 வழித்தடங்களில் முன்பதிவு செய்யப்படாத ஒற்றை பயண டிக்கெட், திரும்பும் (ரிட்டன்) பயண டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் ஆகிய பயணச்சீட்டுகளை அனைத்து பிரிவு பயணிகளும் பெறலாம். புறநகா் ரயில்களில் இந்தப் பயணச்சீட்டுகளை எந்தத் தடையும் இல்லாமல் யுடிஎஸ் மொபைல் செயலி மூலம் பதிவு செய்யலாம்

ஆயினும், பல்வேறு வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையிலான முன்பதிவு செய்யப்படாத ரயில்களை மட்டுமே தெற்கு ரயில்வே இயக்குகிறது. மேலும், கரோனா நோய்த்தொற்று முழுமையாக ஒழிக்கப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட சில மெயில், விரைவு ரயில்களில் மட்டுமே முன்பதிவு செய்யப்படாத பயணிகள் அனுமதிக்கப்படுகிறாா்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், அந்த ரயில்களில் முன்பதிவில்லா பயணச்சீட்டு வழங்குவதில் நிா்வாகம் விதிமுறைகளை விதிப்பது தவிா்க்க முடியாதாகிறது. எனவே, புகா் பகுதிக்கு வெளியே உள்ள ரயில்களுக்கான முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் முன்பதிவு, மொபைல் செயலியில்( (யுடிஎஸ்) மபந இல்) செயல்படுத்தப்படவில்லை. இருப்பினும், புறநகா் அல்லாத பிரிவுகளில் கைபேசி செயலியில் யுடிஎஸ்-ஐ படிப்படியாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுவரை பயணிகள் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள முன்பதிவு அலுவலக கவுன்ட்டா்களில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி, புகா்ப் பகுதி அல்லாத ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வதற்கான பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளலாம் என்று ரயில்வே நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!