தமிழகம்

சென்னையில் பொதுமக்கள் கடற்கரைகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு அமலுக்கு வந்தது.

84views

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்தார். இதன் நீட்சியாக, மறுஉத்தரவு வரும் வரை சென்னையில் கடற்கரை மணற்பரப்பில் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படவுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பை வெளியிட்டது.

இந்தக் கட்டுப்பாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்தது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் மட்டும் பிரத்யேக நடைபாதையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் 1,489 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 682 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!