தமிழகம்

சசிகலா சிறை முறைகேடு வழக்கில் கர்நாடக உள்துறை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவு

48views

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு வில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது சிறையில் சலுகைபெற்றதாக புகார் எழுந்தது. இதை விசாரித்த சிறைத் துறை டிஐஜி ரூபா, சசிகலா சலுகைகளை பெறுவதற்காக டிஜிபி சத்திய நாராயணராவ், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். 2019-ம் ஆண்டு இதை விசாரித்த, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, ‘சசிகலாசிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை’ என அறிக்கை அளித்தது.

இதையடுத்து சத்திய நாரா யண ராவ், கிருஷ்ணகுமார் மற்றும்சசிகலாவுக்கு நெருக்கமானவர் கள் மீது ஊழல் தடுப்பு பிரிவுபோலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர். அதன்பின் சத்திய நாராயணராவ், கிருஷ்ணகுமார் மீது அக்டோபர் 8-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி சதீஸ் சந்திரஷர்மா முன்னிலையில் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க 4 வாரம் அவகாசம் கோரப்பட்டது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இருவர் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கர்நாடக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!