ஐரோப்பா லீக் கால்பந்தில் வில்லாரியல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 11-10 என ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தியது.
போலந்தில் நடந்த ஐரோப்பா லீக் கால்பந்து தொடரின் 50வது சீசனுக்கான பைனலில் ஸ்பெயினின் வில்லாரியல், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் மோதின. ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் வில்லாரியல் அணியின் ஜெரார்டு, ஒரு கோலடித்தார். இதற்கு 55வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் காவானி, ஒரு கோலடித்து பதிலடி தந்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என சமனில் இருந்தது.
பின், இரு அணிகளுக்கும் தலா 15 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் முடிவிலும் போட்டி 1-1 என சமநிலையில் இருந்தது. இதனையடுத்து போட்டியின் முடிவு ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறைக்கு சென்றது. இதில் அசத்திய வில்லாரியல் அணி 11-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றது. இரண்டாவது முறையாக பைனலுக்குள் நுழைந்த மான்செஸ்டர் அணி, மீண்டும் கோப்பை வெல்லத் தவறியது. இதற்கு முன், 2017ல் கோப்பை வென்றிருந்தது.