கவிதை

குழந்தை பாடல் ஒன்று

120views

கண்ணே பாப்பா
கருத்துடனே கேட்டிடு

வாழ இங்கே வழிகள்
உண்டு, நேர்மை அதில்
முதன்மையே

பெற்றோர் சொல் கேட்டிடு
பெருந்தன்மையாய் நடந்திடு

நதிகள் போலே எங்குமே
வளைந்து, நெளிந்து சென்றிடு

மலைகள் போல என்றுமே
திறம் கொண்டு நிமிர்ந்திடு

பாதை எங்கும் முட்கள் என்றால்
பூக்கள் மெத்தை போட்டிடு

தரணி வெல்லும் வலிமை
கொண்டே பாலம் ஒன்று அமைத்திடு

நாளை வாழும் உலகம் எங்கும்
பூஞ்சோலை ஆகட்டும்

காற்றும், நீரும் மாசு இன்றி
இவ்வுலகில் நீ வாழ்ந்திடு

பூவுலகம் உன் கையில்
பூ பூவாய் சிரித்திரு…

விஜி R.கிருஷ்ணன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!