கொரோனா பரவல் அச்சத்திற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நடைபெற்ற நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஏசு கிறிஸ்துவின் பிறப்பு வித்தியாசமானது. ஏசு பிறந்த போது ‘ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று’ என்கிறது விவிலியம். அதாவது ஆளும் அதிகார வர்க்கத்தின் அஸ்திவாரம் அவரது வருகையால் கலங்கிப்போனது. பிறக்கும்போதே சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்திய குழந்தை ஏசு பிரான்.
தேவன் எங்கும் இருப்பவர், ஒரே நேரத்தில். தேவன் எல்லாம் அறிந்தவர். தேவன் எல்லாம் வல்லவர் என்கிறது தேவனுடைய வேத ஆகமம். மண்ணில் பிறந்த மக்களை ரட்சிக்க ஏசு மகான் பிறந்த நாள் குளிர் நிறைந்த ஒரு நாளில்தான் என்ற நம்பிக்கை உள்ளது அதனடிப்படையில் இன்று கிறிஸ்துமஸ் தினம் உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.