செய்திகள்தமிழகம்

கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேதம்

54views

கடலூர் மாவட்டத்தில் மழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடையாகும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசின் ஆதரவு விலையில் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்யும் மழையால் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் சேதமடைகின்றன. எதிர்பாராத வகையில் நேற்று அதிகாலையில் பெய்த மழை யால் கடலூர் அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் குவித்துவைக்கப்பட்டிருந்த சுமார் 3,500 மூட்டை நெல் நனைந்தது.

இதேபோன்று கள்ளக் குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை யிலும் சுமார் 2,500 மூட்டைகள் மழைநீரில் நனைந்தது. தண்ணீர் வழிந்தோட வழியில்லாததால் அவைகள் நெல் குவியலில் தேங்கியதால் அவை விரைவில் முளை விட்டு விடும் என்று விவசாயிகள் கவலை தெரிவித் தனர். எனவே கொள்முதல் நிலையங் களில் கொட்டி வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்பாராத வகையில் நேற்று அதிகாலையில் பெய்த மழையால் சுமார் 6,000 மூட்டை நெல் நனைந்தது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!