சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: நகர்ப்புற தேர்தல் ஓட்டுப்பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளன.
ஆனால், தேர்தல் ஆணையம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. கோவை, சென்னையில் திமுக.,வினரால் பா.ஜ., வேட்பாளர்கள் அதிகம் தாக்கப்பட்டுள்ளனர். கோவை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலையில் பா.ஜ., வேட்பாளர்கள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒட்டுமொத்தமாக 40 ஓட்டுச்சாவடியை திமுக நிர்வாகிகள் ஆக்கிரமித்திருந்தனர்.கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. மேலும், சில ஓட்டுச்சாவடிகளின் அருகிலேயே வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.