அரசியல்

உதயநிதிக்கு உள்ளாட்சி, அன்பில் மகேசுக்கு வருவாய், டி.ஆர்.பி ராஜாவுக்கு மின்சாரம், எழிலனுக்கு சுகாதாரம்.

204views

வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில், யார் யாருக்கு எந்த இலாகாக்கள் என்பதில் அல்லோலப்பட்டுக் கிடக்கிறது அண்ணா அறிவாலயம்.

ஏப்ரல்-6 வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும், தேர்தலுக்கு முந்தையை சில கருத்துக்கணிப்புகளையும் வைத்து திமுகதான் ஆட்சிக்கு வருகிறது என்று அழுத்தமாக நினைக்கிறார் ஸ்டாலின். அதனால்தான் அவர், புதிய ஆட்சி மலரும் வரை சட்டம் ஒழுங்கை காப்பாற்றி வைத்திருங்கள் என்று காவல்துறைக்கு சொல்லி வருகிறார். பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், மே2ம் தேதிக்கு பின்னர் மாற்றம் நிகழும் என்று சொல்லி வருகிறார்.

இந்நிலையில், திமுகவில் நிலவும் விசயங்கள் குறித்து, ”இன்னும் தேர்தல் முடிவுகளே வெளி வராத நிலையில் டி ஆர் பி ராஜாவுக்கு மின்சாரம், எழிலனுக்கு சுகாதாரம், தனக்கு உள்ளாட்சி, அன்பில் மகேசுக்கு வருவாய் துறை,நாமக்கல் ராஜேசுக்கு நெடுஞ்சாலை, அண்ணா நகர் மோகனுக்கு வீட்டுவசதி சி எம் டி ஏ என , இப்போதே தந்தைக்கு பிரஷர் கொடுக்க ஆரம்பித்துவிட்டாராம் உதய நிதி” என்று சொல்கிறார் தமிழக பாஜக கலை மற்றும் பண்பாட்டு தலைவர் காயத்ரி ரகுராம்.

அவர் மேலும், ”அப்பா என்னடான்னா மே2க்கு பிறகு அது நடக்கும் இது நடக்கும்ன்னு அதிகாரிகளை மிரட்டுறார்.மகன் என்னடான்னா முக்கிய துறைகளை தனது சகாக்களுக்கு கேட்டு அடம்பிடிக்கிறார். கடைசியில் மக்களுக்கு பட்டை நாமம்தான். மே 2 வரை கூட பொறுக்கமுடியாத திமுக விடியல் தரப்போகிறதா?”என்ற கேள்வியை எழுப்புகிறார்.

ஆரம்பித்துவிட்டாராம் உதய நிதி,அப்பா என்னடான்னா மே2க்கு பிறகு அது நடக்கும் இது நடக்கும்ன்னு அதிகாரிகளை மிரட்டுறார்.மகன் என்னடான்னா முக்கிய துறைகளை தனது சகாக்களுக்கு கேட்டு அடம்பிடிக்கிறார். கடைசியில் மக்களுக்கு பட்டை நாமம்தான்.மே 2வரை கூட பொறுக்கமுடியாத திமுக, விடியல் தரப்போகிறதா பொறுத்திருந்து பார்ப்போம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!