ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா 2012ஆம் ஆண்டு வெளியாகிய 3படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகமானார்.
இப்படத்தில் தனுஷ், சுருதிஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர். இதையடுத்து வை ராஜா வை படத்தையும் இயக்கினார். இவற்றில் கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் ஜோடியாக வந்தனர். அதன்பின் அவர் படங்கள் ஏதும் இயக்கவில்லை.
அதனை தொடர்ந்து ஐஸ்வர்யா சென்ற ஜனவரிமாதம் தனுசுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
பின் பயணி எனும் இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில் ஐஸ்வர்யா கூடியவிரைவில் “ஓ சாதிசால்” என பெயரிடப்பட்டுள்ள இந்தி படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் இளையராஜாவை நேரில் பார்த்து அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்துடன் சேர்ந்து சில விஷயங்களை குறிப்பிட்டு இளையராஜாவை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.