இன்றைய ராசிபலன்

இன்றைய ராசிபலன் – 31.01.2022

54views
மங்களகரமான ப்லவவருஷம் தை மாதம்18ந் தேதி
31:1:2022 திங்கட்கிழமை
திதி மதியம் 1:58 மணி வரை சதுர்த்தசி திதி பிறகு அமாவாசை திதி
நட்சத்திரம் இரவு 10:10 மணி வரை உத்ராடம் பிறகு திருவோணம்
ராகு காலம் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் காலை 10:30மணி முதல் 12 மணி வரை
குளிகை மதியம் 1:30மணி முதல் 3மணி வரை
சூலம் கிழக்கு
யோகம் இரவு 10:10 மணி வரை மரண யோகம் பிறகு அமிர்த யோகம்
சந்திராஷ்டமம் மிருகசீரிஷம்
மேஷம்

இன்று நன்மைகள் உண்டாகும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேச வேண்டும். பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3, 6
ரிஷபம்

இன்று மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
மிதுனம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
கடகம்

இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். எதிர்பாராத பணவரத்து இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை அதிர்ஷ்ட எண்: 5, 9
சிம்மம்

இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். செல்வம் சேரும். மனமகிழ்ச்சி உண்டாகும். குடும்ப பிரச்சனை தீரும். நேரத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக்கொண்டு சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5
கன்னி

இன்று எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 1, 3
துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். எதிர்பார்த்த ஆர்டர்கள் வரலாம். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
விருச்சிகம்

இன்று குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை வரலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம் அதிர்ஷ்ட எண்: 2, 6
தனுசு

இன்று மனோ தைரியம் கூடினாலும் பழைய சம்பவங்களின் நினைவால் மனமகிழ்ச்சி குறையும். மாணவர்கள் பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 5
மகரம்

இன்று எல்லா பிரச்சனைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். உயர்வு, தாழ்வு என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 2, 9
கும்பம்

இன்று மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்: 1, 3
மீனம்

இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 7
  • ஜோதிட ரத்னாகரம்
    காலக்கணிதன் செ.பாலசந்தர்
    B.Com,M.A.M.A,M.A.,M.Phil.,M.Sc.,P.G.D.C.A.,D.A.,
    மண்ணச்ச நல்லூர்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!