தமிழகம்

இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்- ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

133views

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோஹித்: தீமையை நன்மை வெற்றி கொண்டதை கிருஷ்ண ஜெயந்தி விழா குறிக்கிறது. ‘கடமையை செய், பலனை எதிர்பாராதே’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணரால் அருளப்பட்ட அழியாத செய்தி ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உத்வேகமாக இருந்து வருகிறது. இந்த புனிதமான நன்னாளில், சமூக மேம்பாட்டுக்காக கிருஷ்ணர் அருளிய உலகளாவிய போதனைகளை பின்பற்றுவோம் என்று உறுதியேற்போம். இவ்விழா, தமிழகத்தில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு,ஆரோக்கியத்தை தரட்டும்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: கிருஷ்ண ஜெயந்தி நாளில் அவதரித்த ஸ்ரீகிருஷ்ண பகவான், மக்களைக் காப்பதற்காக அசுரர்களை அழித்தது போலவே, தடுப்பூசி மூலம் கரோனா எனும் நோயைஅழிக்க அனைவரும் உறுதியேற்போம். இந்த நாள் நம் அனைவர் வாழ்விலும் ஒளி கூட்டும் நாளாக மட்டுமல்லாது, வழிகாட்டும் நாளாகவும் அமைய வேண்டும் என அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி: உயிர்களைக் காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். இல்லம்தோறும் மகிழ்ச்சிப் பெருக்கை கொண்டுவரும் திருநாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அன்பும், அமைதியும், இன்பமும் எங்கும் பெருக வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இந்த நாளில் கரோனா பெருந்தொற்றில் இருந்துவிடுபட்டு ஆரோக்கியமாக வாழபிரார்த்தனை செய்வோம். அத்து டன், பழி பாவங்களுக்கு அஞ்சாமல் அதர்மம் புரிந்தவர்களை திருந்தி டச் செய்வதற்கு இந்நாளில் உறுதி யேற்போம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!