கவிதை

ஆய்க்குடியின் செல்வன் கவிதைகள்

299views

# 1
லித்திடாத தேகம் வேண்டும்
கூடவே கூட்டில் அடைபடாத
மனமும் !
மனமே, நின் மணம் எங்கே
எங்கோ விழுந்து அங்கேயே
நாதியற்று கிடைபிணம் ஆனாயோ
கிழிசல்களற்ற ஒற்றை முடி கொண்டேனும்
என் இதயம் தைத்துக்கொடுத்துவிட்டு போயேன் எங்கேனும்
வாழ்ந்துவிட்டு போகட்டும்
நானும் நானும் !

#2
தொலைந்து போக
கரைகள் தேவையில்லை
அலைகள் போதுமாயிருக்கின்றது!

#3
தோ ஒரு திசையில் பறக்கும் பொருட்டு இறகுகள் அமைக்கப்படுவதில்லை
இரைகளும் அதன் வழி நடப்பதில்லை.
அவள் யாரது!
சில நேரம் காதலிப்பவளாய்
சில நேரம் காதலிக்கப்படுபவளாய்
யாரோவாய்
எனதாய்
கவிதைகளை கேட்பவளாய்
கவிதைகளை தருபவளாய்
கவிதைகளை பரிசளிப்பவளாய்
ஆளாய் சில நேரம்
நீ மட்டுமாய் சில நேரம்
நேரம் எல்லாம் நெடுபயணம்
செல்வதே இல்லை போலும்
நாம் மட்டுமேன் என
நாம் மட்டுமேன் கேட்க வேண்டும்
வாழ்வோம் நாமாய்
நமதாய் தமதாய் !

#4
ப்போதும் காதல் பிடிக்கும்
எப்போதாவது கடவுளும்
என்னை கொள்ளவும்
என்னில் கொல்லவும்

 

  • ஆய்க்குடியின் செல்வன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!