செய்திகள்தமிழகம்

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறை : 7 பேர் கொண்ட குழு அமைப்பு!

123views

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டுக்கு மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.இருப்பினும் இந்த ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் , விதிமுறைகள் என தனியாக எதுவும் வரையறுக்கப்படவில்லை. இதனால் சிலர் தங்கள் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் ஆன்லைன் வகுப்பில் அரைகுறை ஆடையுடன் பாடம் நடத்தி வந்ததுடன் , மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காரணத்தினால் psbb பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு என முறையான விதிமுறைகள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் 11ம் தேதிக்குள் அரசிடம் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால் கலை மற்றும் அறிவியல் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய கட்டுப்பாடு விதிகள் உருவாக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!