சென்னை கண்ணகி நகர் பகுதியில் தியாகராய நகர் – கண்ணகி நகர் வழித்தடத்தில் செல்லும் M19B பேருந்தில் எறிய, முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேருந்துகள் சரியான நேரத்தில் வருகிறதா, போதுமான வசதி உள்ளதா, கூடுதல் வசதிகள் தேவைப்படுகிறதா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
மகளிருக்கான இலவச பேருந்து சேவை எந்த அளவுக்கு உள்ளது, இலவச டிக்கெட் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார். மேலும் முககவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு பயணிகளிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
முன்னதாக சென்னை துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வருகை தந்து ஆய்வு செய்தார்.
பின்னர் சென்னை எழில் நகர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மெகா தடுப்பூசி முகாமில் ஆய்வு மேற்கொண்டார். தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து மக்களிடம் குறைகளை கேட்டறிந்த அவர், அங்கு பணியாற்றி வந்த சுகாதாரத்துறை ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது முதல்வருடன் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.