தமிழக அரசில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் நிதித்துறைத் துணைச் செயலராக பிரதிக் தயாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு திட்டச் செயலாக்கத் துறை இணைச் செயலராக ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொது மற்றும் மறுவாழ்வு துறையின் சிறப்புச் செயலராக கலையரசி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் இணை மேலாண் இயக்குநராக பிரதீப் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்ட திட்ட இயக்குநர் மற்றும் கூடுதல் ஆட்சியராக மதுபாலன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை ஆணையராக சிவகுரு பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.