அமெரிக்காவில் விரைவில் குடியுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார். இதுகுறித்து அமெரிக்காவின் டென்வர் மாகாணத்தில் உள்ள வெலிங்டன் நகரில் அவர் பேசினார்.
பதவியேற்ற நூறாவது நாளுக்குள் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தான் விளக்க இருப்பதாக அவர் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆட்சிகாலத்தில் அமெரிக்காவில் குடியேற விரும்பியவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகம். அமெரிக்காவின் அண்டை நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறி நிரந்தர விசா பெற விரும்புபவர்கள் அதிக கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டி இருந்தது.தற்போது இந்த நிலையை முழுவதுமாக மாற்ற முயன்று வருவதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.
கடந்து 2015-ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கருத்து வேறுபாடு காரணமாக இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியது. பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணைய வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
குடியுரிமை திருத்த மசோதாவை தாக்கல் செய்த பின்னர் ஜோ பைடன் பாரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.