தமிழகம்

அதிரடி! 8 வழிச்சாலை திட்டம் அனுமதிக்கப்படாது, விரைவில் 120 உழவர் சந்தைகள்!!

75views

மிழகத்தில் 8 வழிச்சாலை திட்டம் அனுமதிக்கப்படாது என்றும், விரைவில் 120 உழவர் சந்தைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டை யில் அமைந்துள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் சரியாக பாராமரிக்கப்படாத நிலையில் அவற்றை சரியாக பராமரிப்பதுடன் தமிழகத்தில் 120 க்கும் மேற்பட்ட புதிய உழவர் சந்தைகளை திறக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.\


‘ அட்மா ‘ திட்டத்தில் பணி செய்த வேளாண் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு நடத்தி பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்று கூறிய அமைச்சர், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதல்வர் சொன்னதை செய்வார் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் புதிய வேளாண் சட்டங்களை தடை செய்வது தொடர்பாக ஆராய்ந்து முடிவு செய்யப்படும் எனவும் உறுதி அளித்தார்.
பண்ருட்டி பலாப்பழங்களை விவசாயிகள் தடையின்றி சென்னை கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மும்முனை மின்சாரத்திற்கு விண்ணப்பித்து காத்துள்ள விவசாயிகளுக்கான விரைந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
8 வழிச்சாலை , ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் அவற்றுக்கு எதிரான தனது நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!