கட்டுரை

அடம் பிடிக்கும் குழந்தையும் தடுமாறும் சமூகமும்

237views
அச்சோ…..என்ன அழகா கல்யாணம் பன்னி வைங்கன்னு கேட்டு அடம்பிடிக்குது இந்த சின்னக்குட்டினு எல்லோரும் இந்த வீடியோவைப் பார்த்து சிரித்து வைத்திருப்போம்.என்னையும் சேர்த்துதான் சொல்றேன். ஆனா கல்யாணம்னா என்னனு அந்தக் குழந்தைக்கு எப்படிங்க தெரியும்.இப்படிலாம் பேச வைத்து பெரியவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் உலவ விடுகின்றனர். A,B,C,D முழுமையாக சொல்லத் தெரியுமா அந்தக் குழந்தைக்கு?

https://www.youtube.com/watch?v=NXAUfe9mlHo

குழந்தைகள் வளரும்போது தன்னை சுற்றியுள்ள சூழல்களை பார்த்து கற்று வளர்கிறார்கள். அவர்கள் கேட்கும் வார்த்தைகளைத்தான் பேச முயற்சிக்கிறார்கள்.குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போது தேவையற்றதை பேச கற்றுக் கொடுத்து அதைக்கேட்டு பூரிக்கும் பெற்றோர்தான்,அந்தக் குழந்தை சற்றே வளர்ந்து அதையே பேசும்போது கண்டிக்க ஆரம்பிக்கிறார்கள்.குழந்தைகள் இங்குதான் குழம்ப ஆரம்பிக்கிறாங்க.அப்ப ரசிச்சாங்க, இப்ப ஏன் கண்டிக்கறாங்கன்னு.
குழந்தைங்க கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை.கேட்ட வார்த்தைகளைத்தான் பேசறாங்கன்னு சினிமாவில் கதாநாயகன் டயலாக் பேசினால் கை தட்டி ரசிச்சிட்டு அங்கயே மறந்துட்டு வந்திடறோம்.
இதுகூட பரவாயில்லை…..இன்று தம் குழந்தைகளை சகலகலா வல்லவர்களாக்க  பெற்றவர்கள் குழந்தைகளை படுத்தும் பாடு இருக்கே……அப்பப்பா….வார்த்தைகளால் வடிக்க முடியாது குழந்தைகளின் மன உளைச்சலை….
அவர்களுக்கு வராத விசயங்களைப் போட்டுத் திணித்தால்,எத்தனை அழுத்தங்களைத்தான் அந்த பிஞ்சுகள் தாள முடியும்.
என் பிள்ளை கராத்தேவில் பிளாக் பெல்ட், சிலம்ப சிங்கம், கூவும் குயில், ஆடும் மயில்,ஓவியத் தாரகை,நடமாடும் மினி கம்ப்யூட்டர்,அஷ்டாவதானி தசாவதானி,நடிப்பு திலகம்,பலகுரல் மன்னன்….இப்படிலாம் சொல்லிக் கொள்வதில் ரொம்பவே பெருமைதான்.எல்லாம் சரி….அந்தக் குழந்தை எப்ப குழந்தையா இருந்தது?தன்னுடைய குழந்தைப் பருவத்தை இன்பமாக அனுபவித்ததா?

குழந்தைகள் உங்களுக்காக,உங்களின் நிறைவேறாத ஆசைகள்,கனவுகள்,லட்சியங்களை  நிஜமாக்கப் பிறந்தவர்கள் அல்ல. உங்கள் மூலமாக இவ்வுலகில் ஜனித்த ஒரு உயிர்.உங்களில் இருந்து பிறந்த ஒரு உயிர்.அவர்களுக்கென தனிப்பட்ட திறமைகள்,எண்ணங்கள், உணர்வுகள்,விருப்பங்கள், லட்சியங்கள்,இலக்குகள் உண்டு.ஆனா கல்லூரியில் இதைத்தான் படிக்க வேண்டுமென்பது பெற்றவர்களின் கண்டிப்பு.தனக்கு பிடிக்காத படிப்பைதான் பெரும்பான்மையான பிள்ளைகள் படிக்கறாங்க.
இதையெல்லாம்  எத்தனைபேர் புரிந்து குழந்தைகளின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறோம்? ரியாலிட்டி ஷோ என ஊடகங்கள் நடத்தும் பல போட்டிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று காட்சிப்பொருளாக மாத்திட்டு இருக்கோம்…..அதிலும் அந்த நடனப் போட்டிகளில் பாடல்களின் பொருள் புரியாமலேயே நடனமாடும் குழந்தைகளைப் பார்க்கும்போது அவ்ளோ வேதனையா இருக்கும். ரியாலிட்டி ஷோ வோ….பள்ளி,கல்லூரிகளில் போட்டியோ….பிள்ளைகளை பங்கெடுக்க வைங்க.
ஆனால் வருவது வெற்றியோ,தோல்வியோ……
வருவதை சமமாக பாவிக்கும் மனதிடத்தை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுப்பது முக்கியம்.

 

அதைவிட முக்கியம் பெற்றவர்கள்….குழந்தைகள் இந்த சமுதாயத்தைப் பார்க்கும் கண்ணாடியாகப் பெற்றவர்கள்தான் இருக்கிறார்கள்.அவர்கள் கணவன் மனைவிக்குள் எப்படி இருக்காங்க,பிள்ளைகளிடம் ,அக்கம் பக்கத்தினருடன்,உறவினர்களுடன் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதையெல்லாம் பார்த்துதான் வளருகிறார்கள்.
வளரும் குழந்தைகள் சரியான பாதையை தேர்ந்தெடுப்பதில் பெற்றவர்களின் பங்கே அதிகம்…அதனால் அதற்கான முழு பொறுப்பும் அவர்களை சார்ந்ததே.திடீரென வளரும் சமுதாயம் சீர்கேட்டை நோக்கி போய்கொண்டு இருக்கிறது என்றால்  தவறுகளின் அடிப்படை வீட்டில்தான் ஆரம்பமாகிறது.
இனியாகிலும் பிள்ளைகளின் நலனுக்கு உகந்ததை தெரிவு செய்து அவர்களை நல்வழிப்படுத்தலாம்.
  • கோமதி, காட்பாடி

1 Comment

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!