தமிழகம்

மகா தீப ஆரத்தி வழிபாடு

9views
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோவில் தெப்பக்குளத்தில் மகா தீப ஆரத்தி வழிபாடு அகில பாரதிய சன்னியாசிகளின் புரவலர் குழு சார்பாக நீர்இன்றி அமையாது உலகெனின்- என்ற குறளுக்கு ஏற்ப நீர் மேம்பாட்டையும் இயற்கையை பேணுதலையும் கருத்தில் கொண்ட வழிபாட்டு விழாவாக அமைந்தது. தாணுமாலய சுவாமி கோயில் கோபுர முன் வாசலில் இருந்து மேலதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு அகல் விளக்கால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தில் மலர் தூவி மகாதீப ஆரத்தி நடத்தினர்.
இந்நிகழ்ச்சியில ஆதீனங்கள் ,மகா மண்டலேஸ்வரர் மடாதிபதிகள்,தம்பிரான் சுவாமிகள் ,சன்னியாசிகள் சிவனடியார்கள் ,பக்தப் பெருமக்கள், அரசியல் பிரமுகர்கள் ,மக்கள் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக வெள்ளிமலை சைதன்யானந்தஜி, தருமபுரம் ஆதீன தென் மண்டல கட்டளை விசாரணை ஸ்ரீமத் மீனாட்சி சுந்தரம் தம்ரான் சுவாமிகள், மன்னார்குடி ஜியர் சுவாமி, ராமானுஜ மஹராஜ் ,சுவாமி வேதஆனந்தா ,சுவாமி ஈஸ்வரனந்த ,சுவாமி சிவராமானந்தா ,சுவாமி கோரக்சானந்தா, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். காந்தி, அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, துணைத் தலைவர் சுப்ரமணிய பிள்ளை , நாகர்கோவில் மாமன்ற உறுப்பினர் முத்துராமன், வழக்கறிஞர் சிவகுமார், திருநைனார் குறிச்சி ரத்தினமணி, காளியப்பன், கண்ணன், கனகராஜன், பா.பிரபாகர், வீரநாதன், திருமதி.ஜெயந்தி வெள்ளத்துரை, ஜான்சிராணி விஜயராஜா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புரவலர் குழு தலைவர் என். காமராஜ் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமத் பத்மானந்த சரஸ்வதி சுவாமிகள் செய்திருந்தனர். முழு ஊரடங்கு நேரத்தில் சுசீந்திரம் பள்ளி தலைமை ஆசிரியர் ,கதிர்வேல் முருகன் அவருடன் இணைந்து தன் குழுவினருடன் சுசீந்திரத்திலும் மற்றும் அருகாமையில் உள்ள ஊர்களிலும் மருத்துவ பணியும், நிவாரண பணியும் ,இயற்கை பேணும் விதமாக மரம் நடவும் செய்த சமூக சேவகர்- பசுமை நாயகன், மருத்துவர் .தி.கோ. நாகேந்திரன் ( கொரோனாவை எதிர்த்துப் போராடிய முதல் தேசிய போராளி ) கலந்துகொண்ட வழிபாடு செய்தார் . கலந்து கொண்ட அனைவரும் இயற்கையின் முக்கியத்துவத்தை அறியும் வண்ணம் தொடர்ந்து ஒலிபெருக்கியின் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் . பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!