நான் பெற்றதையெல்லாம் மீண்டும் அளிப்பதே மகிழ்ச்சி – பென்சில் மேன்
கல்வியானது ஒவ்வொரு தனி மனிதனையும் சென்று சேர வேண்டும். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும், உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் சில ஏற்றத் தாழ்வுகள் இருந்து கொண்டே தான் வருகின்றன. அதையெல்லாம் தாண்டி ஒருவன் கல்வி வாசலை மிதிப்பதே சவாலானது. அவ்வாறு மிதிக்கும் போது கல்வி பயில பணமில்லாமலோ அல்லது எழுதுபொருள் இல்லாமலோ போவது இந்த உலகின் பிழை. அந்த பிழையை சரி செய்ய வந்தராகவே பார்க்கப்படுகிறார், பென்சில் மேன்...