பிரபா முருகேஷ் – கவிதைகள்
என்னிடம் கேட்பாயா நீ மனதின் .... சலனங்கள் கேள்விகள் விசாரணைகள் கூச்சல்கள் எண்ணத்தின் பரிபாஷைகள் விஷமத்தின் பகடிகள் தங்கு தடையற்ற கற்பனைகள் நீயாக நான் வியாபிக்கும் தருணங்கள் வெண்பஞ்சு மேகங்களை அழைத்து செல்லும் வானம் போல அனைத்துக்கும் செவி சாய்க்கும் புத்தியின் கொண்டாட்டங்களை மழையின் ஈரத்தை உள் வாங்கும் பெண்ணாக ......... என்னிடம் கேட்பாயா நீ சாதிகளற்ற சமுதாயத்தில் சாதிகளற்ற சமுதாயத்தில் குழந்தைகள் பயமின்றி தெருக்களில் விளையாடும் விளையாட்டு முற்றத்தில்...