கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும் “வா தமிழா வா”
கலைஞர் தொலைக்காட்சியில் ஔபரப்பாகி வரும்பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சியான "வா தமிழா வா"ஞாயிறுதோறும் காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிவருகிறது. மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவருகிறது. தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் இந்த நிகழ்ச்சயை தொகுத்து வழங்குகிறார். சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை...