வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் வெறி நாய்கடித்த ஒன்றரை வயது குழந்தை !!
திருவள்ளூவர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை கிராமத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருந்த ஒன்றரை வயது குழந்தையை தெருநாய் ஒன்று கடித்தது.பலத்த காயம் அடைந்த குழந்தையை வேலூர் தனியார் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளதால் கூலி வேலை செய்துவரும் தந்தை பழனி செய்வதறியாமல் தவித்து வருகின்றார். செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்...