archiveநான் மீடியா

சினிமா

வருகிறது மற்றுமொரு சர்ச்சை படம்

இந்திய மொழிகளிலேயே மலையாளத்தில் தான் ஓடிடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. வாரம்தோறும் ஒன்றிரண்டு புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகிறது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் தரமான படங்களை ஓடிடி நிறுவனங்கள் அதிக விலை கொடுத்து வாங்குவதால் அங்கு புதிய சிந்தனை கொண்ட இயக்குனர்களால் புதிது புதிதான கதை களத்தில் உருவாகும் படங்கள் வெளிவருகிறது.அந்த வரிசையில் வருகிறது ஹோலிவோண்ட் (புனித காயம்) என்கிற மலையாளப் படம். அசோக் ஆர் நாத் என்கிற புதுமுகம்...
சினிமா

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தின் முதல் சீசன்… விரைவில் நெட்பிளிக்ஸில் வெளியாகிறது

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமண வீடியோ விரைவில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறை பிரபலங்களின் பிரமாண்டமாக திருமணங்கள் ஓடிடி-யில் வெளியாவது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் நேரடியாக ஓடிடி-யில் வெளியானது. அதற்காக பெரும் தொகை பெற்றனர். அதேபோல் தமிழில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இந்த வழியை கையில் எடுத்தனர். கடந்த ஜூன் 9ஆம்...
விளையாட்டு

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதல் இறுதி போட்டிக்கு இந்திய வீராங்கனை அன்னு ராணி முன்னேறி சாதனை!

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இன்று மகளிருக்கான ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்றன. அதில் இந்தியா சார்பில் அன்னு ராணி பங்கேற்றார். இந்த போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திய அன்னு ராணி, சிறப்பாக விளையாடி, கடைசி வாய்ப்பில் இவர் 59.60 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார். அத்துடன் 8வது இடத்தை...
விளையாட்டு

ஊக்க மருந்து பயன்பாடு: காமன்வெல்த் போட்டியிலிருந்து 2 வீராங்கனைகள் நீக்கம்

கர்நாடகாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாபு, தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலெட்சுமி ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டு பிடிக்கப்பட்டதால் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர். பர்மிங்காமில் நடைபெற உள்ள காமன்வெல்த் விளையாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்டம், 4×100மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்ள இருந்தார். ஜூலை 28ம் தேதி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், தனலெட்சுமிக்கு வெளிநாட்டில் உலக தடகள அமைப்பு நடத்திய...
உலகம்உலகம்

150 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் பெயரை சூட்டி கவுரவித்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்த விலங்கு இனம் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. போலந்து ஆராய்ச்சியாளர்கள் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான பழங்கால கடல் புதைபடிவத்திற்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பெயரை சூட்டியுள்ளனர். இந்த விலங்கு இனம் கடந்த காலத்தில் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனவை என்பது இப்போது தெரியவந்துள்ளது. இந்த விசித்திரமான உயிரினத்தின் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் முழுமையான புதைபடிவம் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எத்தியோப்பியாவில்,...
உலகம்உலகம்

இலங்கை அதிபராக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, அந்நாட்டின் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மே 9ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் கோத்தபய ராஜபக்சே நியமித்தார். கோத்தபய ராஜக்சவுக்கு எதிராகவும் பொதுமக்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டதால், அவர் தனது பதவியை கடந்த 14ம் தேதி ராஜினாமா செய்தார். அதோடு, இலங்கையில் இருந்து தப்பி...
இந்தியா

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிறது.. சாதனை படைப்பாரா திரௌபதி முர்மு?

கட்சிகளின் ஆதரவின் அடிப்படையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு மிக கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று, நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது. நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்தது.டெல்லியில் நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டமன்றங்களிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிந்து வாக்கு பெட்டிகள்...
தமிழகம்

சென்னையின் 75% மக்களுக்கு பாதிப்பு! அலட்சியம் காட்டுவதா? மாநகராட்சிக்கு அன்புமணி கண்டனம்!

சென்னையில் மெட்ரோ ரயில், மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக ஏற்படும் புழுதி மக்களுக்கு நோயை ஏற்படுத்தும் என்பதால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் கட்டுமானப் பணிகளால் வரலாறு காணாத புழுதி உருவாகி சென்னை மக்களை கடுமையாக பாதித்து...
இந்தியா

நீட் தேர்வு: மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரம் – மேலும் 2 பேர் கைது

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும், 3,500 மையங்களில் நடைபெற்றது. நாடு முழுதும், 10.64 லட்சம் மாணவியர் உட்பட 18.72 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வை எழுதினர். இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் நீட் தேர்வு நடைபெற்ற கல்லூரி ஒன்றில், தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளின் உள்ளாடைகளை களையச் செய்து,...
தமிழகம்

ஓ.பி.ரவீந்திரநாத்தின் அதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்: மக்களவைத் தலைவருக்கு இபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ் மகனும், தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதால், அவரதுஅதிமுக எம்.பி. அந்தஸ்தை ரத்துசெய்யுமாறு மக்களவை தலைவருக்கு கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சி தலைமைஅலுவலகத்தையும் சட்டப் போராட்டத்தின் மூலமாக பழனிசாமி கைப்பற்றியுள்ளார்....
1 466 467 468 469 470 539
Page 468 of 539

Right Click & View Source is disabled.

error: Content is protected !!